Category: Informations – பொது அறிவித்தல்கள்

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்காலத் தியானம் சிறப்பு வழிபாடு எதிர்வரும் ஞாயிறு 26.03.2023 வயல்மாதா ஆலயத்தில் காலை 10.30 மணி முதல் மாலை18.00 வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .அன்று நாள் முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்ஆன்ம நலம்பெற அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் ஆன்மிகப்பணியகம் அறியத்தருகின்றது.

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் வருடாந்த தவக்காலத்தியானம்
வயல் மாதா ஆலயம் 26.03.2023 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 18.00 வரை நடைபெறும். நாள்முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்.தவக்காலத்தில் ஆன்ம நலம்பெற பக்தியோடு பங்கெடுப்போம்.

அன்பு நெஞ்சங்களே! 
தவக்காலம் இறையருளின் காலம். இறை இரக்கத்தின் காலம். காலங்களில் சிறந்தது வசந்தம் என்பார்கள். ஆனால் காலங்களில் உயர்ந்தது புனிதமானது தவக்காலம்.

தவக்காலம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். தன்னையே வருத்தித் தவத்தில், செபத்தில் நிலைத்து இறைவனைக் காணும் காலம். புண்ணயங்களில் சிறந்து விளங்கப் புனிதத்தில் உயர்ந்திட நம்மை அழைப்பது…

செபத்தால் இறைவனோடும் தவத்தால் (தன்னல மறுப்புச் செயலால்) நம்மோடும் பிறரன்புச் செயல்களால் நம் சகோதரரோடும் உறவைப் புதுப்பிக்க இந்தவக்காலம் நம்மை அழைக்கிறது.