தவக்காலம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். தன்னையே வருத்தித் தவத்தில், செபத்தில் நிலைத்து இறைவனைக் காணும் காலம். புண்ணயங்களில் சிறந்து விளங்கப் புனிதத்தில் உயர்ந்திட நம்மை அழைப்பது தவக்காலம்.
உலகத் தேவைகளை மறந்து ஆன்மத் தாகத்தைத் தணிக்கத் தூண்டும் காலம். தவக்காலம் புலன்களை அடக்கி வெளியுலகப் பயணங்களைக் குறைத்து ஆன்மீகப் பயணமதை உள்நோக்கி மேற்கொள்ள நம்மை அழைக்கும் காலம் தவக்காலம்
நம்மை இறையாசீரால் நிரப்ப இந்த திருவிபாடுகளில் இணைந்து செபிப்போம்.
