அன்புநெஞ்சங்களே!
இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இயக்குநர் அருட்பணி.போல் மத்தியு அமதி அடிகளாரின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்ட உறுதிப்பூசுதல் அருட்சாதனம் எதிர்வரும் 24.05.2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒப்புரவு அன்னைசிற்றாலயத்தில் திருப்பலியின்போது வழங்கப்படும் என்பதை ஆன்மிகப்பணியக இயக்குநர் அறிவித்துள்ளார்; தயாரிப்புக்கான அமர்வுகள் நிறைவடைந்துள்ளது. 80மேற்பட்ட இளையோருக்கு மறையாசிரியர் திரு.சில்வெஸ்ரர் பயிற்சியளித்து வருகின்றார். புதியவர்கள் இம்முறை சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். அடுத்தமுறை இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.நன்றி!
